Sunday, August 4, 2019

மீன் வாங்க தெரியணுமா?

கடல் மீன்களின் வகைகளும் அதன் விபரமும்


    மீன் கண்கள் மற்றும் செதில் பாகங்கள் பார்த்து தான் பிரஸ் அதாவது புதிய மீன் என அறிய முடியும். மீன் வழு வழுப்பாக காணப்படும், மீன் கண்கள் மிக தெளிவாக இருக்கும், பார்வை உயிருடன் உள்ளவை போல் காட்சி தரும், மீன் செதில்கள் சிவப்பவாக காணப்படும், ஐஸ்-ல் இருந்த மீன் செதில்கள் வெழுத்த சிவப்பாக மண் நிறத்தில் காணப்படும். சில நபர்கள் சிவப்பாக இருக்க குங்குமம் பயன்படுத்துவதால் தொட்டு பார்த்து வண்ணம் கையில் உட்டுகிறதா? எனவும் பார்க்கவும். பழைய மீன்களை தூக்கினால் வளைவு ஏற்படும் மற்றும் மீன் தொட்டுபார்க்கும் போது நெழு நெழுப்பாக தொளிவு ஏற்பட்டு மீன் காணப்படும். புதிய மீன் வளையாது. நறுக்கும் பகுதியில் மீன் இரத்தமானது உரைந்து காணப்பட்டாலும் அது பழைய மீன் என அறிய முடியும். இவ்வாறு மீன் பார்த்து வாங்கி சமைத்தால் சுவையாக இருக்கும். 

மீன் வகைகளும் அதன் விபரமும்

மீன்கள் வெள்ள வெளவால் மீன்,  கருப்பு வெளவால் மீன் , சில்வர் வெளவால் மீன்

    ஒரே பெயரில் பல மீன்கள் கலர் வைத்து தான் வித்தியாசம் கண்டு பிடிக்கப்படுகிறது. வெளவால் மீன்களிளும் 3 வித மீன்கள் வெள்ள வெளவால் மீன்,  கருப்பு வெளவால் மீன் , சில்வர் வெளவால் மீன் என பழக்கத்தில் உள்ளன.

 கவல மீன் மத்தி மீன், கவல மீன், முலகெண்ட மீன், தட்ட கவல மீன், ஒத்த கவல மீன்

  கவல மீன்களிலும் மத்தி மீன், கவல மீன், முலகெண்ட மீன், தட்ட கவல மீன், ஒத்த கவல மீன் என உண்டு.


வஞ்சிரமீன்களிளும் 3 வகை உண்டு அதன் கொடுக்குகளை வைத்து கணக்கிடப்படும். பட்டை வஞ்சிரங்கள் காணப்படும் அது சுவை இருக்காது. ரக்குன் மாலுசி மீன் அதுவும் வஞ்சிரம் மீன் தான் அது கருப்பு நிறத்தில் இருக்கும் தோள் முழுவதும் முள் இருக்கும்.

 ரா பாறை மீன், குளும்பாறை மீன் , செம்பாறை மீன், பெருபாறை மீன் பெருகண் பாறை மீன், வாளம் பாறை மீன்கள்

     பாறை மீன் நிறைய இருக்கு, ரா பாறை மீன், குளும்பாறை மீன் , செம்பாறை மீன், பெருபாறை மீன் பெருகண் பாறை மீன், வாளம் பாறை மீன்கள் ஒரே போல் தான் காட்சி அளிக்கும் அதன் கண்கள் தான் பல நிறங்களில் மாறுபட்டு இருக்கும். மீன் உருவங்களும் வண்ணங்களும் சிறிது மாறுபட்டு இருக்கும். வாளம்பாறை மீன், குளும்பாறை மீன் சுவையாக இருக்கும். மற்ற பாறை மீன் தோள் கடினமாக காணப்படும் உள்பகுதி கருப்புநிறமாக இருக்கும். மற்றபாறை மீன் வெள்ளை நிறமாக இருக்கும்.
 
சிவப்பு  சங்கரா மீன்கள் நகர சங்கரா மீன்  கல் சங்கரா மீன்
 
    சங்கரா மீன்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். 4 வகைப்படும். செதில்கள் வழுவழுப்பாக மென்மையாகவும் காணப்படுபவை ஒன்று. நகர சங்கரா மீன்  என்பவை கடினமாக இருக்கும் மீன் கொழம்பு வைக்கும் போது அதன் சதை துண்டுகள் உடைவு ஏற்படும்.  கல் சங்கரா மீன் இதில் இரண்டு சிறிது வடிவம் பெரிதாக இருக்கும், 4-வது மடசங்கரா மீன் சிறிது பெரிதாக இருக்கும் வாய் திறந்து காணப்படும். நாக்கு சிறிது வெளி வந்தவாறு காணப்படும்.


வெள்ள கிழங்கா மீன் கருப்பு கிழங்கா மீன்

    கிழங்கா மீன் வெள்ள கிழங்கா மீன், வாய் சிறிது ஊசியாக காணப்படும், கருப்பு கிழங்கா மீன் என்பது நீளமாகவும் அகலமாகவும் காணப்படும், வாய் திறந்வாறு அகலமாக காணப்படும், சுவை வெள்ள கிழங்கா மீன் தான் சிறப்பாக காணப்படும். 

சீவல் நண்டு, வரிநண்டு, ஆற்றுநண்டு,

    நண்டு, 3 வகை, சீவல் நண்டு, வரிநண்டு, ஆற்றுநண்டு, வரிநண்டு நில நிறத்தில் காணப்படும். சீவல் நண்டு செங்கல் நிறத்தில் இருக்கும். ஆற்றுநண்டு கருப்பாக இருக்கும். இதில் ஆற்றுநண்டு சுவை அதிகமாக இருக்கும். நண்டுகள் ஐஸ்-ல் இருந்தால் எடை அதிகமாக காணப்படும் வயிறுபகுதி.

நெடு கடம்பா மீன், ஊசி கடம்பா மீன், முட்டை கடம்பா மீன்

    கடம்பா மீன் 3 வகைப்படும், நெடு கடம்பா மீன், ஊசி கடம்பா மீன், முட்டை கடம்பா மீன், இந்த முட்டை கடம்பா மீன் வெளியில் கிடைப்பது கிடையாது இது ஏற்றுமதிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இது சுவை அதிகமாக இருக்கும். 
 
வெள்ள இறால் மீன், ஆற்று இறால் மீன் கருப்பா இருக்கும், டைகர் இறால் மீன்

    இறால் மீன் 5 வகைப்படும், வெள்ள இறால் மீன், ஆற்று இறால் மீன் கருப்பா இருக்கும், டைகர் இறால் மீன் சுவை மிகுந்தது, செமகறா இறால் மீன் செங்கல்நிறம். ஜீன் , ஜீலை ஆகஸ்ட் வஞ்சிரம் மீன், வெளவால் மீன் அதிகம் கிடைக்கும். மற்றும் பாறை மீன், நெத்திலி மீன், வாழ மீன், நெய் மீன்கள் குழம்பு வைத்தும் பயன்படுத்துவார்கள், மீனவர்கள் அதை பதப்படுத்தி காயவைத்து கருவாடகவும் பயன்படுத்தி விற்பனை செய்வார்கள்.

நெத்திலி மீன், வாழ மீன், நெய் மீன்கள்

   கருவாடகவும் இவ்வகை மீன்கள் சுவையாக இருக்கும். சுறா மீன் பெண்கள் தாய்மையுடைய பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் சுரப்பதற்கு இந்த வகை சுறா, பால்சுறா என உணவுகளில் சமைத்து சாப்பிடுவதால் பால் சுரப்பி ஹார்மோன்கள் அதிக அளவு சுரக்கும் என மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.


ஜீலேபி மீன் திருக்கை மீன், காரப்பொடி மீன், கெண்டை மீன், கணவாய் மீன், கோல மீன், கெளுத்தி மீன், கொரவை மீன், தோப்பு மீன், நாக்கு மீன்

 சில இடங்களில் மீன்கள் பெயர்கள் மாறுபட்டு அழைப்பது உண்டு உதாரணத்திற்கு மத்தி மீன் என சென்னையில் அழைப்பது நாகர்கோவில், தூத்தூக்குடியை பொறுத்தவரையில் சாளை மீன் எனவும், முரல் மீன் இரால் மீன் எனவும், கிழங்கா மீன் என்பது ஊழி மீன் எனவும், ஜீலேபி மீன் என்பது கடல் பண்ணா எனவும்,  மற்றும் திருக்கை மீன், காரப்பொடி மீன், கெண்டை மீன், கணவாய் மீன், கோல மீன், கெளுத்தி மீன், கொரவை மீன், தோப்பு மீன், நாக்கு மீன் என பலவகையில் அழைக்கப்படும். இவ்வாறு மீன் பற்றிய முழு விபரங்களும் தெரிஞ்சுச்சா, அடுத்த கட்டுரையிலே வளர்ப்பு- தொட்டி அழகு வண்ண மீன்கள் வகைகளும் பெயர்களும் பராமரிப்பு விபரமும் பார்ப்போம்...